Monday, October 24, 2011

எனக்குள் ஒரு மனசாட்சி


இந்தியில் “A Wednesty” என்ற படம் வந்தது அது தமிழில் ‘எனக்குள் ஒருவன்‘ என்று கமலாஹசன் நடித்து வெளி வந்தது. அதில் ஒரு காட்சி பொதுஜன ஒருவர் அரசு உயர் அதிகாரிகளைப் பார்த்து கூறுவார்கள் ‘சட்டதிட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தேச விரோதிகள் சமூதாயத்தை சீரழீக்க விடக்கூடாது. உகந்த நடவடிக்கை எடுகாவிட்டால் நாட்டின் பிரஜை என்ற அளவில் சமூக விரோதிகள் கொட்டத்தை அடக்க எனக்கு உரிமை இருக்கிறது‘ இந்தக்காட்சியின் போது படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தம்மையும் அறியாது கைதட்டி ஆரவாரித்தனர். இதுமக்களின் உள்ளுணர்வைக் காட்டியது. மிகசிறந்த காட்சி.

மூத்த வழக்குரைஞர் திரு பிரஷாந்த பூஷன் தாக்கப்பட்ட காட்சி தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப காட்டப்பட்டது. அக்காட்சியை பார்த்தவர்கள் எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். எல்லாத் தலைவர்களும் இத்தகைய வன்முறையை கண்டித்தனர். பேச்சுரிமைக்கு எதிரான உணர்வுகளை எவரும் அமோதிக்கமாட்டார்கள். தாக்குதலில் ஈடுப்பட்ட எதிரிகளின் ஒருவனான தேஜ்வந்த்பால் பக்சாலை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வழக்குரைஞர் பிரஷாந்த ஜம்மு காஷ்மீரின் எதிர் காலத்தை ஓட்டெடுப்பு மூலம் மக்கள் முடிவு செய்யவேண்டும் என்ற கூற்று தேச விரோதமானது என்றும் தனது எதிர்ப்பை இவ்வாறு காண்பித்ததற்கு தனக்கு உரிமை இருக்கிறது என்றும் “A Wednesty” என்ற படத்தில் வரும் காட்சியால் உந்தப்பட்டதாகவும் கூறியுள்ளான் எந்த அளவு சினிமா நம்மை பாதிக்கிறது என்பதை உணர வேண்டும்.

அதே சமயம் பிரஷாந்த பூஷன் ஜம்மு காஷ்மீர் பற்றி கூறிய கருத்து சரியா? பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் கூறலாமா? ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பிற்காகவும் பிரிவினை வாதிகளின் தீவிரவாத தாக்குதலில் எவ்வளவு இராணுவ வீரர்களும், காவல்துறையினரும் உயிர் தியாக செய்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல் அண்டை நாடான பாகிஸ்தானின் துணை இல்லை என்றால் நிகழ முடியாது என்பது மூத்த வழக்குரைஞருக்கு தெரியாதா? அவ்வாறு இருக்கையில் பொறுப்பற்று அத்தகைய கருத்து பொது மேடையில் கூறுவது கண்டிக்கத்தக்கது என்பது எதிர்ப்பாளர்களின் வாதம்.

சமூக ஆர்வலர்கள் பலர் தோன்றிவுள்ளனர். சமூதாயத்தில் பிரச்சனைகள் பல தலை தூக்கும் பொழுது மக்களின் எண்ணங்களை இவர்கள் பிரதிபலிப்பதால் ஆதரவு பெற்றுள்ளனர். அதை வைத்து அவர்கள் எது வேண்டுமானால் பேசலாம் என்று எத்தனித்தால் அது விபரீதத்தில் முடியும். எதிலும் நிதானம் வேண்டும். அதே செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஒரு உயர் காவல்துறை அதிகாரி சமூக ஆர்வலர்கள் சர்ச்சைக்குரிய வாதங்களை பொது நிகழ்ச்சியில் தெரிவித்தால் அதற்கான எதிர்ப்புகளையும் சந்திக்க தாயாராக வேண்டும் என்று கூறியது கவனத்துக்குரியது.

-----

No comments: