பெண்கள் அதிக அளவில் பொதுத்துறையிலும், தனியார் துறையிலும் பணிகள் செய்வது பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக அவசியம். பாரதி கனவு கண்ட பெண் சுதந்திரம் அமைந்துவிட்டது என்று பெருமை கொள்ளலாம் என்றால் அதற்கு எதிர் மறையாக பல பிரச்சனைகள் பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
ஒரு இளம்பெண் software நிறவனத்தில் பணிபுரிபவள். அழகும் அறிவும் நிறைந்தவள். கம்பூயூட்டர், கீபோர்டோடு என்று நாள் தவறாது போராடுபவர்கள் உடம்பை தளரவிட நாடுவது கேளிக்கை கிளப்புகள். விடுமுறை நாட்களில் இவை இளைஞர்களின் சரணாலயம். அந்த இடத்தில் ஒரு இளைஞனோடு தொடர்பு எற்படுகிறது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவராயினும் மணம்புரிந்து கொள்கின்றனர். ஆனந்தமாக சில மாதங்கள்தான் கழிந்தன. புகுந்த இடத்தில் சவால்கள், நெருங்கிப் பழகிய பிறகுதான் தெரிய வருகிறது கணவனின் விநோத வழக்கங்கள், கூடா நட்புகள். அகால வேளையில் தீடீரென்று நண்பர்களோடு மறைவது, சூதாடுவது, தீடீர் பணத்திற்கு ஆசைப்பட்டு தெரியாத தொழிலில் முதலீடு செய்தல் போன்றவை சுமுகமான உறவில் சூறாவளியை ஏற்படுத்தின, இவற்றோடு கணவனின் பெற்றோர்களின் சாடல்கள், துன்புறுத்தல்கள், மாமனாரின் சிற்றின்ப சீண்டல்கள், கணவனின் பாராமுகம் என்ற அடுக்கடுக்கான போராட்டங்கள்.
இந்நிலையில் குழந்தைப்பிறக்கிறது ஆயினும் போராட்டங்களுக்கு ஓய்வில்லை. வாய்ச்சண்டையோடு நில்லாமல் கணவன் குழந்தை எதிரிலேயே அடித்துத் துன்புறுத்தத் தூவங்கியதால் துவண்ட அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்களிடம் செல்கிறாள். அங்கும் அவளுக்குக்கிடைப்பது ‘adjust பண்ணி இரு‘ என்ற அறிவுரைதான். தனிக்குடித்தனம் செல்கிறாள், விவாகரத்து வழக்குத் தொடர்கிறது. குழந்தை தனக்குத்தான் வேண்டும் என்கிறான் கணவன். குழந்தைதான் தனக்கு ஒரே ஆதாரம் என்று போராடுகிறாள். இந்திலையில்தான் அவள் ஒரு உண்மையை வெளியிடுகிறாள். குழந்தை தன்னுடைய கணவனுடையது அல்ல என்ற அசரவைக்கும் உண்மை! ஒருமுறை கணவனோடு ஏற்பட்ட சண்டையில் பிரிந்து அலுவலகத்தில் வேலைபுரியும் சக ஊழியனிடம் தஞ்சம் அடைகிறாள் கூடா உறவு ஏற்படுகிறது. கனவனுக்கும் அரசல் புரசலாக தெரிய வருகிறது. அவளுக்கு மேலும் உளச்சல் ஏற்படுத்தும் வகையில், vicarious pleasure என்று சொல்வார்களே அந்த வகையில் குழந்தை தனக்கு வேண்டும் என்று கணவனும் போராடுகிறான்.
பெற்றோர்ருக்கும் தெரியாத உண்மையை எவ்வாறு வழக்கில் வாதாடி குழந்தையை தன்னுடைமையாக்குவது என்ற போரட்டத்தில் சிக்கியுள்ளாள் அந்தப்பெண். இவ்வாறு பல சோகக் கதைகள்.
இத்ததைய குறைகள் ஏன் விளைகின்றன? தனி மனித சுதந்திரத்தின் எதிரொலி என்று விடுவதா, பெற்றோர்களின் வளர்ப்பு முறையை குறை கூறுவதா. கேளிக்கை விடுதிகளில் அரசு நிர்வாகம் மேற்கெள்ள வேண்டிய கண்காணிப்பை குறைகூறுவதா. இது சமூதாயத்தின் வளர்ச்சியா, வீழ்ச்சியா. சிந்திக் வேண்டும்.
பெண்கள் சார்ந்த குற்றங்களையும் பிரச்சனைப்பற்றி ஆலோசனை கூறவும் பிரத்யேக பெண்கள் காவல் நிலையம் இயங்குகின்றன. சென்னையில் மட்டும் ......... மகளீர் காவல் நிலையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம்------- மகளீர் காவல் நிலையங்கள். சென்னை மாநதர கட்டுப்பாட்டு அறையில் பெண்களின் பிரச்சனையை குறித்து புகார்கள் பெறுவதற்கு 1091 என்ற கட்டணமில்லா தொலைபேசி உள்ளது. தொடர்பு கொள்ளலாம்.
பெண்களை தெய்வங்களாக மதிக்கும் பாரம்பரியம் படைத்தது நம் நாடு. உச்சம், ஞானம், திடம், உயிர்ப்பு என்ற நற்குணங்கள்பெற்ற பெண் இனத்தைப் போற்றுவோம்.
///
No comments:
Post a Comment