Monday, October 24, 2011

தைலியின் கதை


1972-ஆம் வருடம் என்று நினைக்கிறேன். ஜெயகந்தனின் ஒரு பக்கக்கதை படித்த ஞாபகம் ‘தைலி‘ என்ற தலைப்பில் அதன் சாராம்சம் 1947-ம் வருடம் தைலி எப்படி இந்தாளோ அதே நிலையில் இருக்கிறாள். நைந்து போன புடவை குளித்தவுடன் பாதி புடவை உலருகிறது பாதி புடவை உடலை மறைக்க. அது உலர்ந்தவுடன் மறு பாதி உலர்த்துவாள். சுதந்திரம் அடைந்தபோது 1947-ல் தைலியின் நிலை இதுதான். 25 வருடங்கள் கழிந்து 1972-ம் வருடத்திலும் நிலை அதே தான். மனதை நெகிழ வைக்கும் ஒரு பக்கக்கதை இது.

2011-ல் தைலியின் நிலை மாறியாதா? எவ்வளவு தைலிகள் மாற்றுத் துனியில்லாமல் இருக்கிறார்கள்? வழிபாடுத்தலங்களின் வாசலில், சாலை சந்திப்புகளில், கல்யாண வீட்டு வாசலில் ஆதரவற்ற ஏழைத் தைலிகளை பார்க்கிறோம்.

இன்னொரு அன்றாடக்காட்சி. தோலில் ப்ளாஸ்டிக் கோணி, தெரு ஓரக் குப்பத்தொட்டியைப் பீராய்ந்து குப்பையிலிருந்து ஏதாவது பிளாஸ்டிக் பொருள்கள், பாட்டில், சாப்பாடு மிச்சம் மீதி என்று எடுத்து அதை வைத்து ஜீவனம் நடத்தவேண்டிய நிலை.

இப்போது வயது முதிந்தவர்களுக்கு Senior Citizen மாதம் ரூபாய். 1000/- என்று அரசு அறிவித்திருப்பது வரவேற்க்கத்தக்கது. முன்பு ரூபாய். 500/- மட்டுமே. இது உரியவருக்கு சென்று அடைகிறதா என்பது கேள்விக்குறி. கந்தையான துணியும், உழைக்கு உடலே கந்தலாக கூணக்குறுகி வயது காலத்திலும் ஓடாய் உழைக்கும் பலரை தெருக்களில் பார்க்கிறோம். அவர்களுக்கு இந்த ஒய்வுதியம் கிடைக்குமா? அவர்களுக்கு நியமாக கிடைக் வேண்டியதற்கு அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து கையேந்த வேண்டுமா? இம்மாதிரி சலுகை இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியுமா? அவர்களுக்கு சேர வேண்டிய சலுகைகளைப் பெற்றுத்தர வேண்டியது யார் பொறுப்பு? இத்தகையக் கஷ்ட நிலையில் உள்ளவர்களை ஏன் அரசு அதிகாரிகள் தேடிப்பிடித்து உதவக் கூடாது? அது தானே உண்மையான மக்கள் சேவை? நமக்கு சேர வேண்டிய சலுகைகளைப்பற்றி குறியாக இருக்கிறோம். கடமைகளை நிறைவேற்றுவதில் அதே துடிப்பு வேண்டாமா? நமது கண்னெதிரே கஷ்ட ஜீவனத்தில் உழலும் இந்த ஏழைகளைப் பார்த்தாவது சுயமரியாதை போர்வையில் வலம் வரும் செல்வந்தர்களின் தன்னநலம் குறையுமா? சமூதாயத்தில் பொது நலம் பெருக வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான சமூதாயம் உருவாகும்.

No comments: