Monday, October 24, 2011

கண்காணிப்பு கேமிராக்கள்


நமது நாட்டில் கூட்டத்திற்கு பஞ்சமில்லை சிறிய பிரச்சனை என்றாலும் வம்வளக்க கூட்டம் கூடும். உதவிக்கு வருபவர்கள் குறைவு. இத்தகைய கூட்டத்தை கலைப்பற்கு நமது ஊர் புத்திசாலி ஏட்டு கையாளும் முறை அலாதியானது. ஒரு பேப்பர் பேனா எடுத்துக்பொண்டு ‘என்ன பாத்தீங்களோ சாட்சி சொல்லுங்கப்பா‘ என்றால் போதும் எல்லோரும் கண நேரத்தில் காணாமல் போய்விடுவார்கள். இப்போது முக்கியமான நெரிசல் அதிகமான இடங்கள், முக்கிய நபர்கள் பாதுகாப்பிற்கும் காமிராக்கள் சாலைகளில் பொருத்தப்படுகின்றன. முதன் முறையாக 2004-ல் வருடம் சென்னையில் எட்டு பிரதான சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க காமிராக்கள் பொருத்தப்பட்டன. காமிராக்களின் உதவியுடன் காவல் துறை கட்டுப்பாட்டு அறைலிருந்து கொண்டே கணினி மூலம் நால்வழிச் சாலைகளையும் கணிகாணிக்க முடியும். 2004-ம் வருடம் சுனாமி தாக்கியபோது மெரீனா கடற்கறை சாலையில் பொருத்தப்பட்ட காமிர ஆர்ப்பரித்த கடல் அலையை படம் பிடித்து காட்டியது.

லண்டன் மாநகரில் சமார் 10,000 காமிராக்கள் காவல்துறைக்கு உற்ற நண்பனாக படங்கள் எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகிறது. 2005-ம் ஆண்டு லண்டன் மாநகரில் தொடர் குண்டு வெடித்த தீவிரவாத தாகுதலில் இந்த காமிராக்கள் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

பல அங்காடிகள், திரையரங்குகள், அலுவலக மையங்கள், City centre. Spencer Plaza. Express Avenue போன்ற பல அடுக்குமாடி வியாபாரத்தலங்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விசேஷ மென் பொருள் (Software) மூலம் இதில் பெறக்கூடிய படங்களிலிருந்து சந்தேக நபர்களை அடையாளம் கண்டு குற்றங்களை தடுக்கலாம்.

எல்லா ATM மையங்களிலும் கமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. இதன் மூலமும் ATM களில் நிகழக்கூடிய தவறுகள் வெகுவாக குறைந்துள்ளன. குற்றங்கள் நிகழ்ந்தாலும் கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு உதவுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் பல வந்து விட்டன. அதிலும் இம்மாதிரியான காமிராக்கள் பொருத்தினால் நிச்சயமாக குற்றங்களை தவிர்கிகலாம்.

எவ்வளவுதான் நவீன உபகரணங்கள் வந்தாலும் மக்கள் கொடுக்கும் உபயோகமான Humint எனப்படும் தகவல் தான் முக்கியமானது. Sensor அடங்கிய பாதுகாப்பு கருவிகள் பொருத்தினால் வீட்டில் இல்லாத போது யாரேனும் நுழைந்தால்நமது செல்போனுக்கு அபாயக்குரல் கொடுக்கும் காமிரா மூலம் எடுக்கப்படும் படங்களும் நமது செல்போனில் பார்க்கலாம். நவீன யுக காமிராக்கள் காவல்துறையின் மூன்றாம் கண் என்றால் மிகையில்லை.

காவல்துறையின் பிரதிநிதி மக்கள் அவர்களும் சீருடை அணியாத போலீஸ் விரர்கள். பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி அமையாதுகாவல் நிர்வாகம். இது உண்மை. If you see something say something என்பதுதான் நச்சென்றவேண்டுகோள். சந்தேகமானதை பார்த்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். அதைப்பற்றி சொல்லுங்கள்.

No comments: