‘லெண்ட்’ என்று கிறித்துவ மதத்தில் புனித நோன்பு நோற்பதை சிறந்த வழிபாடாக போற்றப்படுகிறது. இந்த நோன்பின் இறுதி நாட்கள் மாண்டி வியாழன், புனித வெள்ளி, புனித சனி. ஈஸ்தர் ஞாயிறு என்று அனுசரிக்கப்படுகிறது.
நயவஞ்சகர்களால் யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. தியாகத்தின் உச்சநிலை சமுதாய நலனுக்காகத் தம்மை அர்ப்பணிப்பது. “கடவுளே அவர்களை மன்னித்து விடு தாங்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் செய்கிறார்கள்” என்று பெருந்தன்மையோடு தம்மை சிலுவையிலிட்டவர்களுக்காக கடவுளிடம் இறைஞ்சுகிறார்.
ஏழை மக்களின் வேதனைக் குரலைக் கேட்டு அவர்களை உய்விப்பதற்கும், உலக அமைதிக்காகவும், சிலுவையிலிடப்பட்டதிலிருந்து மூன்றாம் நாள் புத்துயிர் பெற்று அவதரித்தார். புதிய ஜீவனின் அடையாளமாக முட்டையை வைத்து (Easter Egg) புத்துயிர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஆன்மாவிற்கு அழிவில்லை என்பதை அறிவோம்.
யேசுபிரானின் வாழ்க்கை உலக மக்களுக்கு ஒரு மகத்தான பாடம். பேதமின்றி அன்பை அடிப்படையாக வைத்து பிறர் நலனுக்காக வாழ்வதுதான் வாழ்க்கையின் பயன். இந்த நற்செய்தி உலக மக்களுக்கு உணர்த்தப்பட்டது. இதை மனதில் கொண்டு மனித நேயத்தை வளர்ப்போம். தன்னலமற்ற மக்கள் பணி தான் உண்மையாக கடவுளை நேசிப்பதின் அடையாளம்
ஈஸ்டர் திருநாளில் சிறப்பு நேர்காணல் இல்லவாசிகளக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தோடும், குழந்தைகளோடும் அந்நந்நாளில் இறையுணர்வை பகிர்ந்து கொள்ளுங்கள்.
எல்லோருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
1 comment:
நல்ல ஒரு செய்தி அய்யா நன்றி... .......நிவாஸ்
Post a Comment