



இராமகிருஷ்ண பரமஹம்ஸர், வினோபாபாவே மஹாத்மா காந்தி இவர்கள் வாழ்க்கையில் போதித்த கொள்கையை மனதில் இருத்திய கோட்பாடுகளை வாழ்வியலில் கடைபிடித்தார்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் இவர்களை தனது மானசிக குருக்களாக ஏற்றுக்கெண்டு உயர்ந்த வாழ்கை வாழ்ந்தார். வினோபாவின் ‘பூதான்’ என்ற ‘நிலதானம்’ திட்டத்தில் நிலச்சுவான்தாரர்களிடம் இருந்து உபரி நிலத்தைப் பெற்று ஏழைகளுக்கு பிரித்து அளிக்கும் உயரிய திட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கெண்டார்.
ஜெ.பி. அவர்கள் காந்திஜீயின் சபர்மதி ஆசிரமத்தில் தன்னை தொண்டனாக அர்ப்பணித்துக் கொண்டார். உயர்ந்த கொள்கை கோட்பாடுடைய பிரபாவதி என்ற பெண்னை மணமுடித்தார். பெற்றோர்களின் கட்டாயத்தினால் மணமுடித்த பிரபவதி காந்திஜீயின் பிரம்மச்சரியம் மற்றும் சமூக சேவை கெள்கையால் உந்தப்பட்டு மண வாழ்க்கையை துறந்து பொது வாழ்க்கையில் ஈடுபட தனது விருப்பத்தை தெரிவிக்க ஜெ.பி அவர்களும் சம்மதித்தார்.
ஜெ.பி. அவர்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு முழுமையாக சமூக சேவையில் ஈடுப்பட்டார்.
சுதந்திர போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது சிறைவாசிகளின் மனநிலையை உணர்ந்து அவர்களது மன அமைதிக்கு அறிவுறை வழங்கி அவர்களுக்கு நல்வழி புகட்டினார்.
“ ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் ஆன்றோர்கள்” என்று பொருட்களின் விலை மதிப்பின் அடிப்படையில் அணுகாமல் அவற்றின் மெய் பொருளை கண்ட ஆன்றோர்கள் வாழந்த பூமி இது. பக்தி புரட்சிச் செம்மல் கபீர்தாஸிடம் ஒருபக்தர் இரண்டு தங்க நாணயங்கள் அன்பளிப்பாகக் கொடுக்க ஒன்று தவறி தண்ணிரில் விழுந்தது. பக்தர் பதறிக்போய் குளக்கரையில் தேடிப்பார்க்க கிடைக்கவில்லை கபீர்தாஸ்யிடம் எங்கு தவறி விழுந்தது என்று வினவ அதற்கு கபீர் இன்னொரு நாணயத்தையும் தண்ணிரில் போட்டு ‘இங்கு தான் விழுந்தது’ என்றாராம்! நாம் தான் பொருளைக்கட்டி அழுகிறோம் கார் விபத்து என்றால் வண்டிக்கு என்ன சேதாரம் என்று வருந்துகிறோம் பிள்ளை பிழைத்துக்கொண்டனே என்று சந்தோஷ்ப்படாமல்!
காத்தியடிகள் அகிம்சை, ஒத்துழையாமை போராட்டம் வெள்ளையனே வெளி யேறு என்று ஆங்கிலேயே ஏகாதிபத்யத்தை எதிர்த்து போராடி இந்திய சுதந்திரம் அடைய வழி வகுத்தார்.
ஜெ.பி. அவர்கள் இந்திய சமூக அமைப்பில் உள்ள குறைகளை உணர்த்தி அவை சீராக இயங்குவதற்கும் மக்களின் அன்றாட இன்னல்களை களைவதற்கும் போராடியவர். சமூதாய சீர்திருத்தம் மற்றும் அரசு துறைகளும், மற்ற நடைமுறைகளும் செவ்வனே செயல்பட பாடுப்பட்டார். அவரது போராட்டம் உள்நாட்டுப் போராட்டம் நம்மிடம் உள்ள குறைகளை களைய போராட்டம் தொண்டு தான் முக்கியம் பதவி முக்கியம் அல்ல பதவிக்காக பரிதவிக்கவில்லை பதவிகள் நாடி வந்தன அவற்றை புறக்கணித்தார் மக்கள் தொண்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். காந்தியத்தை செயலாக்கிய செம்மல் ஜெ.பி அவர்கள்.
கருப்பர்களுக்காக போராடி 28 வருடங்கள் இருண்ட சிறையில் அடைக்கப்பட்டும் மனம்தளராது மக்கள் நலன் ஒன்றையே முழுமுச்சாக கொண்ட ஆப்பிரிக்க காந்தி என்று பாராட்டப்படுபவர் திரு நெல்சன் மண்டேலா அவர்கள். அவர் போரட்டத்தில் வெற்றி பெற்று தெற்கு ஆப்ரிக்கா சுதந்திரம் அடைத்த பின்னர். ஆட்சியில் பொறுபேற்ற போது காந்தியடிகள் பிறந்த மண் இந்தியாவை நோக்கி பதவிப் பிரமாணம் எடுத்துக் கெண்டார் என்பது சரித்திரம். அத்ததைகய பெருமை வாய்ந்த உலகையே வயப்படுத்திய காந்தியக் கெள்கையை தளராது பின்பற்றிய பெரும் பொது நலவாதி ஜெ.பி. அவர்கள். அரசியல் மற்றும் சமுதாயத்தை சுத்தப்படுத்த உழைத்தவர். அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி வெற்றிக் கண்ட தியாகச் செம்மல் ஜெ.பி. அவர்களை நினைவில் கொண்டு போற்றுவோம். அவர் விட்டுச் சென்ற பாதையை மறவாமல் பின்பற்றுபோம்.
1 comment:
nalla pathiuvkku mikka nantri Iyaa...
Post a Comment