Saturday, April 17, 2010

வீரம் விளைத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்




நாள் 14.04.2010




கனத்த மனத்தோடு நினைக்கிறோம்

பனித்த மலர்தூவி கண்கள்

பனித்து அர்ப்பணிக்கிறோம்

சினத்த தீயை அணைத்து மக்களை

பலத்த கரத்தால் அரவணைத்து

உரத்த சிந்தனை வடிவமாய்

அளித்த சேவை பரிமளித்து

படைத்த சாதனை சிறந்து

கிடைத்த அரிய உயிரை

வீரதீரத்தில் துறந்து வானளாவிய
உத்தமரை தியாகச் சுடரை

கனத்த மனத்தோடு நினைக்கிறோம்

பனித்த மலர்தூவி கண்கள்

பனித்து மலைத்து நிற்கிறோம்.

No comments: