தனித்துச் செல்
தனித்துவத்தோடு செல்
துணை எவருமில்லை
துணிவோடு செல்
துணை வேண்டாம்
கவலை வேண்டாம்
தனித்துச் செல்
தனித்துவத்தோடு செல்
ஏக்த சலோ ரே
என்ற ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை பிரபலமாக்கி அடிமையென்று துவண்டிருந்த இந்திய சமுதாயத்தை கிளர்தெழ செய்த மாவீரன் நேதாஜி.
இந்தியத்தாயை
சுதந்திர பாவையாக
கணவு கண்ட இரு தேசபக்தர்கள்
பாரதியார், நேதாஜி
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திர அடைந்து விட்டோம்
அடைந்து விட்டோமென்று என்றான் பாரதி.
நேதாஜி சுதந்திர இந்தியா கொடி ஏற்றி மக்களுக்கு
சுத்ந்திரம் அடைந்தே தீர்வோம் என்ற நம்பிக்கை என்ற
விதை விதைத்தார்.
1897 ஜனவரி 23ம் ந்ள் இவ்வலகில் அவதரித்த போஸ் சிறப்பாக பட்டப்படிப்பை முடித்து உயரிய அரசுப் பணியான ICS ல் தேர்ச்சிப் பெற்றார். ஆனால் மகாத்மாவின் சுதந்திர அறைகூவலால் ஈர்க்கப்பட்டு பதவியை துறந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஸ்வாமி விவேகானந்தர் எதற்கும் தயங்காதே அச்சம் தவிர் துணிவோடு செயல்படு என்று இளைஞர்களுக்கு அளித்த அளிவுரையில் உந்தப்பட்ட உந்நத போராளியாக உருவெடுத்தார். எவனொருவன் சமுதாயத்திற்காகவும், மக்கள் நலனுக்காகவும் உழைக்கின்றோனோ அவன் தான் உண்மையாக உயர்ந்தவர் என்றார் சுவாமி விவேகானந்தர். அந்த வகையில் பண்பின் சிகரம் நேதாஜி அவர்கள். இந்திய தேசியப் படையை மோகன் சிங் என்பவரோடு இணைந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஒடுக்குமுறையை எதிர்த்து போராட முடியும் என்பதை நிருபித்தார்.
சுதந்திர இந்தியாவை கனவு கண்ட நேதாஜி சுதந்திரமாகி இந்தியாவை காண்பதற்கு முன் மறைந்தார். அவரது மறைவும் ஒளி பிறந்து மின்னலாக மறைந்தது போல் பிரமையாக நிற்கிறது. நல்லங்களின் நெஞ்சில் இன்றும் நிறைந்திருக்கிறார். அவரது வீர வாழ்க்கை இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று சோம்பி இல்லாமல் வீறுநடைபோட்டு சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளை எதிர்த்து போராடவேண்டும். நேதாஜி அமைத்த தேசிய அணியில் சேர்ந்து தமது இளமைப் பருவத்தை அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான வீரர்களில் எனது தந்தையின் தமையனாரும் ஒருவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
நேதாஜி வழியில் சத்தியத்திற்கு போராடுவோம். ஊழலை எதிர்ப்போம். உரிமை மேல் பெருமா பாராட்டுவோம்.
வாழ்க நேதாஜி ஓங்குக அவரது புகழ்.
No comments:
Post a Comment